அளவில் சிறிய வார்த்தைகளாலும் வரிகளாலும் அகிலப் புகழ்பெற்ற கவிதை வடிவம் ஹைக்கூ. புதுக்கவிதை, மரபுக்கவிதை, நாட்டுப்புறப்பாடல்கள், உரைநடனம் என்று தமிழில் பல்வேறு வகைகளில் கவித்திறன் காட்டி வருவோர் நடுவே கவிஞர் இரா.இரவியும் ஒருவர். “தமிழனென்று சொல்லடா, தலைநிமிர்ந்து நில்லடா, ஆங்கிலத்தில் கையொப்பம் ஏனடா?” என்று நெற்றியடி அடித்தவர் இரவி. இந்நூலில் சற்று பெரிய பெரிய கவிதைகள், அதுவும் அதிகமாகப் பெரிதாகாத அழகான கவிதைகள். எல்லாக் கவிதைகளும் தமிழ் குறித்தது. தமிழின் பெருமை குறித்தது. தமிழ் குறித்த நமது பொறுப்பு குறித்தது. பாவேந்தர், “தமிழ் எங்கள் உயிருக்கு நேர்” என்றுதானே பாடினார். அது உயிருக்கும் மேலானது என்பதே கவிஞர் பாடவந்த செய்தி. தமிழ்மொழி மட்டுமல்ல, தமிழ்இனத்தின் பண்பாடாகவும் விளங்குகிறது என்பது உலகறிந்த உண்மை. இதை, “போர் புரிவதிலும் அறநெறி வகுத்திட்ட தமிழ், போரிலும் அநீதியைத் தவிர்த்திட்ட தமிழ்” என்கிறார் கவிஞர் இரவி. அமுதம் உண்டால் ஆயுள் நீளு